ADVERTISEMENT
உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை கொமரலிங்கம், சாமராயபட்டி - பெருமாள் புதுார் பிரிவு அருகே, போலீசார் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மூவரை நிறுத்திய போது, அவர்கள்கையில் வைத்திருந்த பொருளை, இருட்டில் துாக்கி வீசினர். போலீசார் தேடி பார்த்தபோது, நாட்டுத்துப்பாக்கி என தெரிய வந்தது.
விசாரணையில், கோவையில் ஒரு மாதத்திற்கு முன், துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.
சாமராயபட்டியைச் சேர்ந்த துர்க்கைவேல், 39, சிவசக்தி, 20, மாசாணமுத்து, 23 ஆகியோரை போலீசார் கைது செய்து, நாட்டு துப்பாக்கி, தோட்டா பறிமுதல் செய்தனர். துப்பாக்கி விற்பனை செய்த, கோவையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!