மனைவி கொலை கணவருக்கு ஆயுள்
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மனைவி மாரியம்மாளை 59, கொலை செய்த கணவர் முத்தையாவிற்கு 65, ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வத்திராயிருப்பு தாலுகா ஆயர்தர்மத்தை சேர்ந்தவர் முத்தையா 65. இவரது மனைவி மாரியம்மாள் 59. இத்தம்பதிக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். முத்தையா மது போதைக்கு அடிமையானதால் குடும்பத்தினர் யாரும் அவருடன் பேசுவதில்லை. இதற்கு மனைவி மாரியம்மாள் தான் காரணம் என கருதினார். இதனால் இருவரிடையயே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
2021 ஜூன் 28 அதிகாலையில் மாரியம்மாளை முத்தையா அரிவாளால் வெட்டி கொலை செய்தார். நத்தம்பட்டி போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. முத்தையாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அன்னக்கொடி ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!