வருஷநாடு அருகே 60 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய 2 பேர் கைது
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், வருஷநாடு அருகே லாரியில் கருவாடு கூடைகளுக்குள் கஞ்சா கடத்தி வந்த இருவரை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அய்யனார்கோயில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மீன்கள், கருவாடு ஏற்றி வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். கருவாடு பெட்டிகளுக்கு நடுவில் தலா 2 கிலோ பண்டல் வீதம் 30 பண்டல்களில் 60 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மினி லாரியில் இருந்த சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த நல்லமலை 35, புதுக்கோட்டை மாவட்டம் வண்ணிச்சிபட்டியைச் சேர்ந்த டிரைவர் ராஜா 32,வை கைது செய்து விசாரணை செய்ததில் கஞ்சா கடத்தலில் குமணன் தொழுவைச் சேர்ந்த சத்யராஜ் 37, சிங்கராஜபுரம் அருண் 36, ஈஸ்வரன் 35, ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மூவரும் தலைமறைவாகிவிட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்து நல்லமலை, ராஜா இருவரையும் ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!