காங்.,வெற்றியால் பா.ஜ., பின் வாங்கியது சிவகங்கையில் கார்த்தி எம்.பி., பேட்டி
சிவகங்கை:-''ஈரோட்டில் காங்., வெற்றி பெறும் என்ற உண்மையை தெரிந்து கொண்டதால் தான் பா.ஜ., போட்டியிட முன்வரவில்லை,'' என சிவகங்கையில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கொள்கை, சிந்தாந்த ரீதியாக பா.ஜ.,வில் அண்ணாமலை சேரவில்லை. ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்து பொது வாழ்க்கைக்கு வர பதவியை ராஜினாமா செய்து, தமிழகத்தில் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர ரோந்து வந்தார். குறிப்பாக ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்த்தார். அவர் ஆரம்பிக்காததால் திடீரென பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார்.
ஈரோடு சட்டசபை தேர்தலில் தி.மு.க., - காங்., கூட்டணியில் குறைந்த பட்சம், பதிவாகும் ஓட்டுக்களில் 65 சதவீத ஓட்டுக்களை காங்., வேட்பாளர் பெறுவார். மகத்தான வெற்றியை ஈரோட்டில் பெறும். இந்த யதார்த்த உண்மையை அண்ணாமலை புரிந்து கொண்டதால் பா.ஜ., ஈரோட்டில் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
கமல் சிந்தாந்த ரீதியாக மதசார்பின்மை கொள்கையை பின்பற்றி வருகிறார். அவர் தனிகட்சி நடத்தாமல் பெரிய கூட்டணிக்கு வரவேண்டும் என நான் கேட்டேன். அதனால் காங்., கூட்டணிக்கு முன்வந்துள்ளார். இன்னும் கமலின் பங்களிப்பு காங்.,ல் பெருகும்.
கவர்னரை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும். கவர்னர் சமரச போக்கிற்கு வந்து அவரது ஆதிக்கத்தை குறைத்தால் நல்லது.
உள்ளூர் இளைஞர்கள் வேலை செய்ய தயாராக இல்லாததால் பிற மாநிலங்களில் இருந்து வேலைக்கு இங்கு வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆதாய கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேவகோட்டை கொள்ளையர்களை விரைந்து பிடிக்க டி.ஐ.ஜி., துரையிடம் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்துள்ளேன்.

'கூல்லிப்' விற்க தடை அவசியம்
பள்ளி மாணவர்கள் 'கூல்லிப்' சாப்பிடுவதாக தெரிகிறது. மாணவ சமுதாயத்தை அழிக்கும் இது போன்ற பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தடை விதிக்க கோரி பார்லிமென்டில் பேச உள்ளேன். கூல்லிப் போன்ற பொருட்களை வினியோகம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!