ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமாம் தாங்கி கப்பல், பிரச்சண்ட் இலகு ரக ஹெ லிகாப்டர், ரபேல் போர் விமானம் போன்றவை இந்தியாவை வல்லரசு நாடாக அடையாளம் காட்டுகின்றன.
மிரட்டும் ரபேல்
இந்திய படையின் மகுடமாக ரபேல் போர் விமானங்கள் உள்ளன. ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3700 கி.மீ. தூரம் பயணிக்கும். எதிரிகளை கண்காணிக்கும் ரேடார் கருவி உள்ளது. மணிக்கு 2000 கி.மீ. வேகத்தில் செல்லும் விமானத்தின் நீளம் 50 அடி உயரம் 17 அடி. இறக்கையின் நீம் 36 அடி.
கடல் காவலன்

ஏவுகணைகளை செலுத்தக்கூடிய ஐ.என்.எஸ்., சூரத், எதிரிகளின் ரேடார்களில் சிக்காத ஐ.என்.எஸ்., உதயகிரி, போர்க்கப்பல்கள பலம் சேர்க்கின்றன.
இளமைக்கு வாய்ப்பு
ராணுவத்தில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக அக்னிபாத் திட்டம் தொடங்கப்பட்டது. பணிக்காலம் 4 ஆண்டு முப்படையிலும் சேர்த்து இப்பணிக்கு ஆறு மாதத்தில் 54 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
வான் வருவான்
உள்நாட்டுி தயாரான பிரச்சண்ட் இலகு ரக ஹெ லிகாப்டர் எதிரிகளுக்கு சவால் கொடுக்கிறது. இதன் எடை 5800 கிலோ இரட்டை இன்ஜின்களில் இயங்கும்.
ஏவுகணை உள்பட நவீன ஆயுதங்களை பொருத்தி தாக்குதல் நடத்தலாம். 16,400 அடி உயரத்தில் பறக்கும் உலகின் ஒரே விமானம் இது. எதிரிகளின் பதுங்கு குழிகள், பீரங்கி, ஏவுகணைகளை துல்லியமாக தாக்கும்.
சியாச்சின் போர் முனை
* லடாக்கில் உள்ள உலகின் உயரமான (12,000 அடி) சியாச்சின் போர்முனை இந்திய ராணுவ வசம் உள்ளது.
*கடல் மட்டத்தில் இருந்து 18,379 அடி உயரத்தில் பெய்லிபாலத்தை இந்திய ராணுவம் கட்டியது. இது லடாக்கில் டிராஸ்-சுரு ஆறு இடையே அமைக்கப்பட்டள்ளது. நீளம் 98 அடி.
ஆசியாவின் பெரிய கப்பல் படை பயிற்சி அகாடமி கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஏழிமலாவில் உள்ளது.
*2013-ல் உத்தரகண்ட் ஹிமாச்சலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் மக்களை இந்திய விமானப்படை மீட்டது.
ஏன் ஜன.26
குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்வு செய்கின்றனர்.
1947-ல் ஆக.15-ல் சுதந்திரம் பெற்ற போது டொமினியன் அந்தஸ்து தான் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டீஷ் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஆட்சி பகுதியாக இருந்தது. அவர்கள் நியமித்த கவர்னர் ஜெனரலே நம் நாட்டின் தலைவராக இருந்தார். அவர்களது இந்திய அரசு சட்டம் 1935 தான் அமலில் இருந்தது. பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜன.26-ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டீஷாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, ஜனாதிபதி உருவானது. இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது.
கொடி கவுரவம்
*ஜனாதிபதி கொடியேற்றும் போது ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை வழங்குவர். 7 துப்பாக்கியால் 3 முறை வானத்தை நோக்கி சுடுவர்.
*சுதந்திர தினத்தில் பிரதமரும்,குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியேற்றி உரை நிகழ்த்துவர்.
*அரசியலமைப்பு சட்டம் எழுதி முடிக்க 2 ஆண்டுகள் 11 மாதம் 17 நாட்கள் ஆனது.
ஜி-20 பெருமை
*குடியரசு தின விழாவில் முதன்முறையாக தேசி கொடி ஏற்ற உள்ளார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
* டில்லியில உள்ள ராஜபாதை கர்தவயா என மாற்றப்பட்ட பின் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பு நடக்க உள்ளது.
*குடியரசு தினத்தில் எகிப்து அதிபர் பங்கேற்பது இதுவே முதல் முறை
*ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்புடன் முதன்முறையாக குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.
வியத்தகு இஸ்ரோ
உலகில் விண்வெளி ஆய்வில் 5-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ ) அனுப்பிய சந்திராயன் -1 விண்கலம் நிலவில் தண்ணீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்து இந்தாண்டு சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா ஏல்1 விண்கலம் நிலவுக்கு சந்திராயன் -3, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் -1 உட்பட பல திட்டங்கைளை செயல்படுத்த உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!