ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்; 20 வாகனங்களுக்கு ஆய்வு அறிக்கை வழங்கல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்திய, 20 வாகனங்களுக்கு ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி மற்றும் குழுவினர் இணைந்து, இரண்டு பஸ் ஸ்டாண்டுகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பஸ் ஸ்டாண்டிற்கு வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களில், அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில், ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:
பொள்ளாச்சியில் உள்ள, இரண்டு பஸ் ஸ்டாண்ட் மற்றும் பாலக்காடு ரோடு பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து, சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து வாகனங்களிலும், அதிக சப்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறதா என, 'டெசிபல் மீட்டர்' வைத்து, கண்காணிப்பு செய்யப்பட்டது.
இதில், ஏழு பஸ்கள், மூன்று கனரக சரக்கு வாகனங்கள், கேரளா பஸ், இரண்டு, மினி பஸ், ஒன்று என மொத்தம், 20 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ஏர் ஹாரன் குழாய்கள் அகற்றப்பட்டன.
மல்டி டோன் ஹாரன் போன்ற ஒலி மாசு ஏற்படுத்தும் ஹாரன்கள் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீ� பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!