எளிதாக பட்டா மாறுதல் செய்யலாம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
உடுமலை : எங்கிருந்தும் எந்நேரமும்' இணையதளம் வாயிலாக, இடைத்தரகர் உதவியின்றி, பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள், இருக்கும் இடத்தில் இருந்தே, https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் உட்பிரிவு கட்டணத்தையும் ஆன்லைன் வாயிலாக செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள், https://eservices.tn.gov.in/eservicesnew/login/appstatus.html என்ற இணையதள இணைப்பு வாயிலாக, விண்ணப்ப நிலையை அறியலாம்.
பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பிறகு, பட்டா மாறுதல் நகல், பட்டா சிட்டா, புலவரைபடம், 'அ' பதிவேடு விபரத்தை, எங்கிருந்தும் எந்நேரமும் கட்டணமின்றி இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஊர்க்கட்டு நத்தம் நில ஆவணங்கள், கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ளது. ஆனால், முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
பட்டா மாறுதல், 'ஆன்லைன்' மயமாகியிருந்தாலும், நத்தம் நிலம் தொடர்பான பட்டா மாறுதல், புலவரைபடம் ஆகியவை, இன்னும் பழைய நடைமுறையிலேயே தொடர்வதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!