கே.பி.ஆர்., - ஏ.பி.பி., இடையே ஒப்பந்தம்
கோவை : கே.பி.ஆர்., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் ஏ.பி.பி., குளோபல் இண்டஸ்ட்ரீஸ் அண்டு சர்வீசஸ் நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி அரசூரில் உள்ள, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் அகிலா கூறியதாவது:
தொழில்துறை, 4.0 பாடத்திட்டம், பயிற்சி, கூட்டு சான்றிதழ் திட்டம், வேலைவாய்ப்புகள் மற்றும் ஏ.பி.பி.,யுடனான கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை உருவாக்கவும், ஒருங்கிணைக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
எலக்ட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் மென்பொருள் துறையில் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புகள், சான்றிதழ் படிப்புகள், குறுகிய கால படிப்புகள் மற்றும் கல்வித்திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். மாணவர்கள் தங்கள் இன்டென்ஷிப்பின் போது, ஏ.பி.பி.,யின் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஏ.பி.பி., நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் சுப்பாராவ், இந்தியாவுக்கான ஆபரேஷன் சேல்ஸ் தலைவர் பிரவின்குமார் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!