ஆடு வளர்ப்பு நிதி நிறுவனம் ரூ.15 கோடி மோசடி; வழக்கு தொடர்ந்து விசாரிக்க உத்தரவு
கோவை : ஆடு வளர்ப்பு நிதி நிறுவனம், 15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை, காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த, முல்லை குரூப்ஸ் என்ற நிதி நிறுவனத்தினர், நாட்டு மாடு மற்றும் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், முதலீடு செய்வோருக்கு அதிக வட்டி தருவதாக விளம்பரப்படுத்தினர்.
இதை நம்பி, 387 பேர், 15.84 கோடி ரூபாய் டெபாசிட் செய்தனர். ஆனால், பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தனர்.
கோவை பொருளாதார குற்றப்பிரிவில், புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவன பங்குதாரர்கள் குறிஞ்சி நாதன், கதிர்வேல், அண்ணாதுரை, சத்யமூர்த்தி, அருணா ரெமி ஆகியோரை, 2019ல் கைது செய்தனர்.
இவர்கள் மீது, கோவை டான்பிட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்தது.
இவ்வழக்கை விரைந்து விசாரிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதனால், தொடர்ந்து விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன் பேரில், கோவை டான்பிட் கோர்ட்டில், தினசரி சாட்சிகளை ஆஜர்படுத்த, போலீசுக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, 15க்கும் மேற்பட்டோரிடம் சாட்சியம் பெறப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!