மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக்; கோவை காம்ராட்ஸ் வெற்றி
கோவை : மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், கோவை காம்ராட்ஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என் தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் கோப்பைக்கான' மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, டைமண்ட் சிட்டி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், கோவை காம்ராட்ஸ் மற்றும் விஜய் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த, கோவை காம்ராட்ஸ் அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 166 ரன் எடுத்தது.
அணியின் சுரேஷ் பாபு (50) பொறுப்பாக விளையாடினார். விஜய் சி.சி., அணியின் சாமிநாதன், மூன்று விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய விஜய் சி.சி., அணியின் பிரபு குமார் (36), ஞானபிரகாசம் (36*) நிதானமாக விளையாட, மற்ற பேட்டர்கள் தங்களின் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இதனால், 45.3 ஓவர்களில் அணி, 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோவை காம்ராட்ஸ் அணிக்காக, தஷிஸ் கண்ணன் நான்கு விக்கெட் வீழ்த்தினார். கோவை காம்ராட்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!