மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், நாளை (27ம் தேதி) கும்பாபிேஷக விழா நடக்கிறது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த, 2005ம் ஆண்டு கும்பாபிேஷக விழா நடத்தப்பட்டது.
தற்போது, 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, கும்பாபிேஷக விழா நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டனர்.
இதையடுத்து, விமான பாலாலயம் கடந்தாண்டு செப்., மாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, விமான கோபுரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் பெயின்ட் அடித்து புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டன.
கடந்த, 1953ம் ஆண்டு கோவில் இருந்தது போன்று தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில், 13 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த, 23ம் தேதி விநாயகர் வழிபாடு, மஹா கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பூஜைகளும், இரவு, 7:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் நடைபெற்றன.
இன்று காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகம் துவக்கம், வேதிகார்ச்சனையும், காலை, 11:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், காலை, 11:30 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் காலம் யாக பூஜைகள் நடக்கின்றன.
நாளை (27ம் தேதி) காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாகம் துவக்கம், காலை, 7:30 மணிக்கு நாடி சந்தானம், காலை, 9:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம்புறப்பாடு உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறுகிறது.
காலை, 9:44 மணிக்கு மேல், 9:55 மணிக்குள், ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மஹா கும்பாபிேஷகமும், காலை, 9:55 மணிக்கு மேல், 10:25 மணிக்குள் விநாயகர், முருகப்பெருமான், அங்காளஅம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மஹா கும்பாபிேஷகமும் நடக்கிறது.
காலை, 11:00 மணிக்கு அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு மஹா அபிேஷகம், விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை, மாரியம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!