சிறுத்தை தாக்கி தொழிலாளி காயம்
கோத்தகிரி, : கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார்.
கோத்தகிரி பறவை காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 51. இவர், குயின்சோலை 'டான்டீ' நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை இவர் வெளியே சென்றுள்ளார்.
அப்போது, இரண்டு குட்டிகளை ஈன்றிருந்த சிறுத்தை, புதர் மறைவிலிருந்து திடீரென வெளியேறி தாக்கியுள்ளது. கை பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் தப்பியோடியதில் தடுமாறி விழுந்ததில், பற்கள் உடைந்துள்ளன. அருகில் இருந்தவர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!