ADVERTISEMENT
குன்னுார் : 'குன்னுார் பல பறவைகளில் வாழ்விடமாக உள்ளதால், வனத்தை ஒட்டிய நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் பல அரிய வகை பறவைகள் உள்ளன. அதில், உள்ளூர் பறவையான,'கிரே ஹெட்டட் புல்புல்', குன்னுார், கோத்தகிரி, ஊட்டி, கூடலுார், தேவாலா உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் காணப்படுகிறது.
இவைகள் பசுமை மாறா காடுகள், நீரோடைகள், சிற்றாறுகளின் அருகே உள்ள வனங்களில் காணப்படும், நாவல், அரம்பா, இருளி போன்ற மருத்துவ குணம் நிறைந்த மரங்களில் உள்ள பழங்களை அதிகம் உட் கொண்டு வாழ்கிறது.
ஓங்கில் இயற்கை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆசாத் கூறுகையில்,
''கடந்த, 2021ல் குன்னுார் பகுதியில் 'கிரே ஹெட்டட் புல்புல்' பறவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாழ்விடத்தில்,'ஸ்கொயர் டெயில் புல்புல், டார்க் பிரன்டட் பாப்லர், மஞ்சள் கழுத்து புல்புல்' பறவைகள் காணப்படுகின்றன. நீரோடை, சிற்றாறு போன்ற நீர்நிலைகளை ஒட்டிய வனத்தில் இவைகள் வாழ்கின்றன. நீர்நிலைகள் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுப்பதன் மூலம் இத்தகைய அரிய பறவை இனங்களை பாதுகாக்க முடியும்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!