ADVERTISEMENT
போடி:போடி பகுதியில் போதை ஊசி சப்ளை செய்து பள்ளி, கல்லுாரி மாணவர்களை அடிமையாக்கிய சுஜித்குமார் 25, தங்க தமிழ் வாசன் 23, திவின்குமார் 23, கைது செய்ப்பட்டனர்.
தேனி மாவட்டம், போடி பகுதி மாணவர்கள், இளைஞர்கள் இடையே போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருகிறது. 'மெப்கின் டெர்மின் ' ஊக்க மருந்தை சிலர் போதை ஊசியாக பயன்படுத்துகின்றனர்.
போடி பகுதியில் போதை ஊசி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., சுரேஷ் உத்தரவில் தனிப்படை அமைத்து சிலமலையை சேர்ந்த சுஜித் குமார், தங்க தமிழ்வாசன், போடி குலாலர்பாளையம் திவின்குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில் சிலமலையைச் சேர்ந்த பிரவின் ஆன்லைனில் போதை ஊசி வாங்கி மொத்தமாக இவர்களிடம் விற்றுவந்துள்ளார். இதனை சிலமலையை சேர்ந்த பரத்குமார், ராசிங்கபுரம் கார்த்திக்குடன் சேர்ந்து மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது.
தப்பியோடிய பிரவீன், பரத்குமார், கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தங்க தமிழ் வாசன் டொம்புசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக சுகாதார ஆய்வாளராக பணியாற்றுகிறார்.
மயக்கவியல் டாக்டர் கூறுகையில், இந்த மருந்தை ரத்த அழுத்தம் குறைந்து வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பயன்படுத்துவார்கள். இந்த ஊசி செலுத்துவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். மருத்துவத்துறை அல்லாதவர்களுக்கு இம்மருந்து கிடைப்பது கடினம். தொடர்ந்து தவறாக பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, ஹார்ட் அட்டாக் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!