பெரியாறு அணையில் மழை
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் டிச. 27 ல் 142 அடியை எட்டியது.
அதன்பின் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழையின்றி நீர்மட்டம் வெகுவாக குறைய துவங்கியது.
இந்நிலையில் தேக்கடியில் 5.2 மி.மீ., பெரியாறில் 15.6 மி.மீ., மழை பதிவானது.
இதனால் 74 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 466 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் 130.30 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு 1233 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.
நீர் இருப்பு 4767 மில்லியன் கன அடியாகும்.
நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் மழை பெய்யவில்லை.
அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 110 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!