கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மணக்காவிளையை சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக நீண்ட காலம்
இருந்தார். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கிருந்தும் வெளியேறி தி.மு.க. ஆதரவு திராவிட இயக்க பேச்சாளராக செயல்பட்டு வந்தார்.
சமீப காலமாக அவருக்கு லேசான வலிப்பு, ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன.
ஜன., 23-ல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அவர் ரயிலில் மயக்கம் அடைந்தார். திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
தற்போது நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சுயநினைவு தப்பியுள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (62)
எல்லா அரசியல் கட்சிகளும் நாஞ்சில் சம்பத் அவருக்கு பணம் / மருத்துவ உதவி செய்ய வேண்டும்.......
வாய் வியாபாரி இவன்
மரணப்படுக்கையில் படுக்கும் வரை எவரும்… உண்மையை உணர்வதில்லை, அது வரை தான் சொல்வது… செய்வது… எல்லாம் சரி என்றே நினைப்பர் கடைசில் படுக்கையில் படுக்கும் போது புரியும் நாம் இல்லாத போதும் இங்கு எல்லாம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்… யாரும் நமக்காக நகர்வதை நிறுத்தப்போவதில்லை… என்று… இந்த அண்டத்தில் நாம் ஒரு தூசில் கோடியில் ஒரு பங்கின் கோடியின் ஒரு பங்கிற்க்கும் சிறிவர் என்று… வாழ்கை எல்லோருக்கும் முடியும்… திரும்பிப்பார்க்கும் போது கொஞ்சமாவது திருப்த்தியாக இருந்தால் நல்லது. “காரித்துப்பினால்… துடைத்துப்போன்” என்ற பொன்மொழியை தமிழுக்குத் தந்து “தாய்ஒலி” என்று பத்திரிக்கையை படித்து தமிழுக்கு தொண்டார்ரியவர் ஆத்மா… அமைதியாக இறைவன் அருளட்டும்.
இந்த சமயத்தில் எதிரிகளும் மனம் இளகி பிரார்த்திப்பர், ஆனால் வெறுப்பை உமிழ்ந்து சபித்து ஆனந்தப்படும்
பணம் என்ற குற்றவாளிக்காக நேர்மையை விட்டு கொடுக்க கூடாது...