ADVERTISEMENT
திருவாடானை:முன் விரோதத்தில் அக்காளை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்த தம்பி உட்பட நான்கு பேரை போலீசார் தேடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஓரியூரைச் சேர்ந்த நாகலிங்கம் மனைவி கோவிந்தம்மாள், 63. நேற்று முன்தினம் இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர், காலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் வயலுக்கு சென்று தேடினர்.
அப்போது, மண்வெட்டியால் தலையில் அடிக்கப்பட்டு, வயலுக்குள் கொலை செய்யப்பட்டிருந்தார். எஸ்.பி., தங்கதுரை நேரில் விசாரித்தார்.
மோப்ப நாய் கோவிந்தம்மாள் வீட்டருகே உள்ள அவரது தம்பி மகாலிங்கம் வீட்டில் போய் நின்றது. மகாலிங்கம் வீடு பூட்டி இருந்ததால், போலீசார் அவரை தேடுகின்றனர்.
கோவிந்தம்மாள் மகன் கதிரேசனுக்கு, மகாலிங்கம் மகள் நிவேதாவை திருமணம் செய்து வைத்தனர். வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால், 2019ல் நிவேதா தற்கொலை செய்தார். அந்த வழக்கில் கோவிந்தம்மாள், கதிரேசன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விரோதத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற கோவிந்தம்மாளை, மகாலிங்கம், மனைவி முனியம்மாள், உறவினர்கள் காளிமுத்து, ராணி ஆகியோர் கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர். கோவிந்தம்மாள் மகள் ராதா புகாரில் நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!