காய்ச்சலுக்கு குழந்தை பலி உறவினர்கள் சாலை மறியல்
வந்தவாசி:வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை இறந்ததால், டாக்டர்களின் அலட்சியம் காரணம் எனக்கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, கோட்டை தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹீம் மூசா; இவரது ஆறு மாத ஆண் குழந்தை முகமது ரசூல்; சளி, காய்ச்சலால் பாதித்த குழந்தையை, மூன்று நாட்களாக, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர்.
நேற்று முன்தினம்மாலை குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது.
பெற்றோர் கூறியும், பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் கண்டுகொள்ளாமல், சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தை இறந்தது.
ஆத்திரமடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை, வந்தவாசி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
குழந்தை இறப்புக்கு காரணமான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு இழப்பீடாக, 15 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும். மருத்துவமனை தரத்தை மேம்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினர்.
சுகாதார நலப்பணிகள் மாவட்ட இணை இயக்குனர்ஏழுமலை, செய்யாறு ஆர்.டி.ஓ., அனாமிகா மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். பின், மறியல் கைவிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!