Load Image
Advertisement

தமிழகத்தை கைவிடாத தி.மு.க.,வினர்

DMK, who has not given up on Tamil, has a wall advertisement near Tirupur called Jor.    தமிழகத்தை கைவிடாத தி.மு.க.,வினர்
ADVERTISEMENT
பல்லடம்,:பல்லடத்தில், 'தமிழக'முதல்வரே என, முதல்வர் ஸ்டாலினுக்குதி.மு.க.,வினரே வாழ்த்து விளம்பரம் எழுதியுள்ளனர்.

சென்னையில் நடந்த காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ரவி, 'தமிழ்நாடு' என்ற பெயருக்கு பதில், 'தமிழகம்' என்பதே சரியாக இருக்கும் என, கருத்து தெரிவித்தார்.

தி.மு.க.,வினர் கவர்னரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கள் பதிவிட்டனர்.

இதற்கு கவர்னர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் சர்ச்சை ஓய்ந்தது. மார்ச், 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள்.

இதற்காக, திருப்பூர்மாவட்டம், பல்லடத்தில் தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் எழுதி உள்ளனர்.

இந்த விளம்பரத்தில், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக, 'தமிழக' முதல்வர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

'தமிழகம்' என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததி.மு.க.,வினரே இதை பயன்படுத்தி உள்ளனர்.

எனவே, கவர்னர் கூறியதை, தி.மு.க.,வினரே ஏற்கின்றனரா என, பொதுமக்கள் மத்தியில்கருத்து நிலவி வருகிறது.


வாசகர் கருத்து (1)

  • N SASIKUMAR YADHAV -

    தேசியவாதிகளுக்கு எப்போதுமே தமிழகம்தான் . அதனால் தீயமுகவில்கூட சில தேசியவாதிகள் இருக்கிறார்கள் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்