Load Image
Advertisement

நடிகரின் மொபைல் போன் மீண்டும் கிடைத்தது

சென்னை:'டிவி' தொடர் படப்பிடிப்பில் திருடு போன, நடிகரின் விலை உயர்ந்த மொபைல் போன் கிடைத்தது.

சென்னை, புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் அழகப்பன், 33; 'ஆனந்தராகம்' என்ற 'டிவி' தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு, கடந்த 23ம் தேதி, பெரம்பூரில் உள்ள ரேவதி ஸ்டோரில் நடந்தது.

அப்போது, அவரது விலை உயர்ந்த மொபைல் போன் திருடு போனது. இது குறித்து அவர், திரு.வி.க., நகர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், அந்த கடைக்குச் சென்ற இரு பெண்களில் ஒருவர், மொபைல் போனை எடுத்த கண்காட்சி, தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பானது. இதைக்கண்ட, அதே பகுதியைச் சேர்ந்த பெண்களில் ஒருவர், தன்னுடன் இருந்த மொபைல் போனை எடுத்த பெண்ணை கண்டித்துள்ளார்.

இதையடுத்து, இரு பெண்களின் குடும்பத்தினரும், நேற்று முன்தினம் இரவு, திரு.வி.க., நகர் காவல் நிலையத்திற்குச் சென்று, திருட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை என போலீசாரிடமும், நடிகரிடமும் வருத்தம் தெரிவித்து, அந்த மொபைல் போனை ஒப்படைத்தனர்.

இதையடுத்து நேற்று காலை, திரு.வி.க., நகர் போலீசார், நடிகர் அழகப்பனிடம் மொபைல் போனை கொடுத்தனர்.

அவரும், பெண்களின் குடும்ப சூழல் உணர்ந்து புகாரை வாபஸ் பெற்றார். மொபைல் போன் கிடைக்க உதவிய போலீசார், பத்திரிகை, ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ வெளியிட்டார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement