ADVERTISEMENT
சென்னை:சினிமா பாணியில், ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முத்தியால்பேட்டை போலீசார், நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, பின்புறம் எவ்வித பொருட்களும் இல்லை.
வாகன ஓட்டுனர் இருப்பிடத்திற்கு முன்புறமாக உள்ள 'டேஷ்போர்டு' பகுதியில் பார்த்த போது, கட்டுக்கட்டாக கஞ்சா கட்டுகள் சிக்கின. மொத்தம் 25 கட்டுகளில், 50 கிலோ கஞ்சாவை நுாதன முறையில் கடத்தி வந்தது தெரிந்தது.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 23 முதல் 36 வயது வரை உள்ள மூவரை கைது செய்த போலீசார், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 50 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில், இதுபோன்று சரக்கு வாகனத்தில் நுாதன முறையில் கஞ்சா கடத்துவது போன்று காட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!