நில வகைப்பாடு மாற்ற விளம்பரம் வெளியிடுவதில் அரசில் குளறுபடி
சென்னை:நில வகைப்பாடு மாற்றத்துக்கான மனுக்கள் மீது, பொதுமக்கள் கருத்து கேட்பு தொடர்பாக விளம்பரம் வெளியிடுவதில், அதிகாரிகள் பெரும் குளறுபடிகளை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டத்தின்படி, சர்வே எண் வாரியாக நிலங்களின் வகைப்பாடு வரையறை செய்யப்பட்டு உள்ளது. பல இடங்களில் தவறான வகைபாடு இருப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வகைப்பாடு மாற்ற வேண்டும் என்றால், உரிமையாளர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, பொதுமக்கள் கருத்து பெறப்படும்.
பொதுமக்கள் கருத்துகளையும் சேர்த்து, பல்வேறு துறை உயர் அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்ப குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும்.
இதில், நில வகைப்பாடு மறுவரையறை கோரி விண்ணப்பிப்போர், பொதுமக்கள் கருத்து கேட்புக்கான அறிவிக்கையை, நாளிதழ்கள் வாயிலாக வெளியிட, 30 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலுத்துகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தினாலும், சி.எம்.டி.ஏ., இதற்கான அறிவிக்கை விளம்பரத்தை, தனித்தனியாக வெளியிடுவதில்லை. சாதாரணமாக, 20 முதல் 30 விண்ணப்பங்களை தொகுத்து, ஒரே விளம்பரமாக வெளியிடுவது வழக்கம்.
இந்த விளம்பரங்களை தமிழ், ஆங்கிலத்தில், தலா ஒரு நாளிதழில் வெளியிட வேண்டும் என்பது விதி. ஆனால், குறிப்பிட்ட சில நாளிதழ்களுக்கு மட்டுமே, அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:
நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான விளம்பரங்கள், அரசு துறை விளம்பரம் அல்ல. இது, விண்ணப்பதாரர்களின் கட்டணத்தில் தான் வெளியிடப்படுகிறது.
இந்த விளம்பரங்களுக்கான உள்ளடக்க குறிப்புகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாரித்தாலும், அதை பெறும், செய்தி, மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் நிலையில், எந்த நாளிதழில் வெளியிட வேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது.
தமிழில் குறிப்பிட்ட இரண்டு நாளிதழ்களில் மட்டுமே, மாற்றி மாற்றி விளம்பரம் வெளியிடப்படுகிறது.
'தினமலர்' உள்ளிட்ட முன்னணி நாளிதழ்களில், இந்த விளம்பரங்களை வெளியிடாதது ஏன் என்பது புதிராக உள்ளது.
எவ்வளவு செலவானாலும், அது விண்ணப்பதாரர்களிடம் இருந்து தான் வசூலிக்கப்படும் என்ற நிலையில், எதன் அடிப்படையில் சில நாளிதழ்களுக்கு, அதிகாரிகள் முன்னுரிமை தருகின்றனர் என்ற கேள்வி எழுகிறது.
இதில் நடக்கும் குளறுபடியை தீர்க்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!