அறங்காவலர்கள் விண்ணப்பத்தில் அரசியல் குறித்த கேள்வி சேர்ப்பு
சென்னை:'கோவில்களில் அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில், அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டது' என, ஹிந்து சமய அறநிலையத் துறை தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில், அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி வாதாடியதாவது:
அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில், அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டது.
அறங்காவலர்கள் பணிக்கான விண்ணப்பங்களை, இணையதளங்களில் வெளியிடும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.
பத்து மாவட்டங்களில், அறங்காவலர்கள் தேர்வுக்கான, மாவட்ட வாரியான தேர்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், 'மீதமுள்ள மாவட்டங்களில், விரைவில் மாவட்ட குழுக்கள் அமைக்க வேண்டும்.
அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்.,8க்குள் இணையதளங்களில் வெளியிட, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்து. விசாரணையை பிப்.,8க்கு தள்ளி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!