கோவில் செலவு தொகையை ஆன்லைனில் தான் தரணும்!
சென்னை:'கோவிலுக்காக செலவு செய்யும் தொகையை இனி, 'ஆன்-லைன்' வாயிலாக வழங்க வேண்டும்' என, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவரது சுற்றறிக்கை:
அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள அறநிறுவனங்களில் செலவுகள் மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாக காசோலை வழங்குவது நடைமுறையில் உள்ளது.
ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல், கோவில் பணியாளர்கள் பெயரில் காசோலைகள் வழங்கப்பட்டு, அதில் இருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக, தணிக்கையில் கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால், செலவினத்தின் உண்மை தன்மையை அறிய இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால், கோவில் செலவிற்கான தொகையை, காசோலையாக வழங்கும் நடைமுறையை கைவிட வேண்டும்.
அதற்கு மாற்றாக, 'ரியல் டைம் கிராஸ் செட்டில்மன்ட்' எனும் ஆர்.டி.ஜி.எஸ்., அல்லது தேசிய மின்வழி நிதி மாற்றம் எனும் என்.இ.எப்.டி., வாயிலாக மட்டுமே வழங்க வேண்டும்.
காசோலை வாயிலாக செலவு தொகை வழங்கியது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!