வங்கி சேவைகள் 5 நாட்கள் முடக்கம்?
சென்னை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். விடுமுறை நாட்களையும் சேர்ந்து, வங்கி பணிகள் ஐந்து நாட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30, 31ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுதவிர, குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று விடுமுறை. நாளை மட்டும் வங்கி உண்டு. அடுத்த நாள், நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை; அடுத்து ஞாயிறு அன்றும் வழக்கமான விடுமுறை.
வரும், 27ம் தேதி தவிர, நாளை முதல் ஐந்து நாட்கள் வங்கி பணிகள் செயல்படாது. பல லட்சம் ரூபாய்க்கான சாசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் என, வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஏ.டி.எம்.,களில் போதிய பணம் இருப்பு வைக்கவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை சமரச பேச்சு நடக்க உள்ளது.
இதில் உடன்பாடு ஏற்பட்டால், வரும், 30, 31ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள் வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!