ரூ.3,934 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்பு
திருவள்ளூர்:''ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, 3,934 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உள்ளது,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அறநிலையத் துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, அளவீடு செய்து எல்லை கற்கள் பதிக்கும் பணி, 2021ம் ஆண்டு, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் துவக்கப்பட்டது.
அதை தொடர்ந்து நடக்கும் இப்பணியில், 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.
ஒரு லட்சத்து, ஒன்றாவது ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று, திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை கிராமத்தில் உள்ள பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் செய்யப்பட்டது.
அப்போது, தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, எல்லை கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு சொந்தமாக, 90 சென்ட் நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது.
கோவில்கள் நிலம் மொத்தம், 5 லட்சத்து, 42 ஆயிரத்து, 429 ஏக்கர் நிலம் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இதுவரை, 3,934 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!