ஆசிரியர்களின் மாற்றுப்பணி விபரம் சேகரிப்பு
சென்னை:அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் உள்ள ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள தொடக்க கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், நியமனம் செய்த இடங்களை விட்டு, மாற்றுப் பணியில் உள்ளனர்.
அவர்களின் விபரங்களை உடனே திரட்டுமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும், உயர் மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் மாற்றுப்பணி விபரங்களும், முதன்மை கல்வி அலுவலர்களால் சேகரிக்கப்படுகின்றன.
ஏப்ரலில் நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் முடிந்ததும், புதிய ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த, இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!