சமூக விரோதிகளின் கூடாரமாகும் மணலி மண்டல அலுவலகம்
திருவொற்றியூர்:மணலி மண்டல அலுவலகம், காமராஜர் சாலை - சி.பி.சி.எல்., சந்திப்பு அருகே கட்டப்பட்ட, புதிய பிரமாண்ட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இக்கட்டடத்தில் மண்டல குழு தலைவர், உதவி கமிஷனர், செயற்பொறியாளர், உதவி வருவாய் அலுவலர், மண்டல சுகாதார துறை அலுவலர், ஆய்வாளர்கள், எலக்ட்ரிக்கல், தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் அறைகள் என, பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.
முதல் தளத்தில், ஆயிரக்கணக்கான ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மண்டல அலுவலக கட்டடத்திற்கு முறையான சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வளாகத்தின், இடபக்கத்தின் சுற்றுசுவர் சேதம் காரணமாக, தற்காலிகமாக கட்டைகளை வைத்து அடைத்து வைத்துள்ளனர். இதனால், திருடர்கள் எளிதில் உள்ளே புகும் சூழல் உள்ளது.
முக்கிய ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுவதால், மண்டல அலுவலக வளாகத்தை சுற்றி, வலுவான மதில் சுவர்கள் கட்ட வேண்டும்.
இல்லாவிடில், பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என, பலரும் எச்சரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!