சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு துாக்கு
ஓங்கோல் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அம்பாவரம் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, 2021ல் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானாள்.
அடுத்த சில தினங்களில், அவளின் உடல் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதில் தொடர்புடைய, சிறுமியின் நெருங்கிய உறவினரான சித்தையாவை, 30, கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதன் விசாரணை, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சித்தையாவுக்கு துாக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!