ADVERTISEMENT
கும்மிடிப்பூண்டி:மொழி, இன, கலாசார பாகுபாட்டை தவிர்க்க வலியுறுத்தி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், இந்தியா முழுதும், 14 மாத காலமாக தொடர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பீஹார் மாநிலம், ஜெஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீரஜ்குமார், 30. எம்.பில்., பட்டதாரி.
இவர், மக்கள் மத்தி யில் நிலவும் பாகுபாட்டை களைய வேண்டும் என்ற எண்ணத்தில், 2021ம் ஆண்டு, நவம்பர் மாதம், 11ம் தேதி, தேசிய சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை துவக்கினார்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து துவங்கிய இவரது சைக்கிள் பயணம், இமாச்சல், ஹரியானா, டில்லி, உத்திரபிரதேசம், பீஹார், உத்ரகாண்ட், சிக்கிம், அசாம், அருணாச் சல், நாகாலாந்து.
மணிப்பூர், மிசோராம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஓடிசா, தெலுங்கானா, ஆந்திராவை கடந்து, நேற்று, கும்மிடிப்பூண்டி வழியாக, தமிழகத்திற்குள் நுழைந்தார்.
தன், 14 மாத சைக்கிள் பயணத்தில், இதுவரை, 12,600 கி.மீ., கடந்துஉள்ளார். பயணத்தின் போது, அந்தந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களை சந்தித்து, பாகுபாட்டை தவிர்த்து தேச ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்தி பேசி வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து தீரஜ்குமார் கூறுகையில், 'வேற்று மாநில மனிதர்களை, வேற்று கிரக மனிதரை போல் உள்ளூர் மக்கள் பார்ப்பது, மொழி, ஜாதி, மதம், கலாசாரத்தை முன் நிறுத்தி பிரிவினை ஏற்படுத்துவது போன்ற சம்பவங்கள் தற்போது நம் தேசத்தில் அதிகரித்து வருகிறது.
'அனைவரும் இந்தியரே என்ற ஒற்றுமை உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்' என, தெரிவித்தார்.
அவரது சைக்கிள் பயணம் வெற்றி பெற வேண்டும் என அந்தந்த மாநில மக்கள் வாழ்த்தியதாக பெருமையுடன் தெரிவித்து, தன் பயணத்தை தொடர்ந்தார் தீரஜ்குமார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!