ADVERTISEMENT
அகர்த்தலா, திரிபுரா உட்பட மூன்று வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி, அரசியல் தலைவர்களின் படங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டும்.
ஆனால், திரிபுராவின் சப்ரூம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த, பிரதமர் நரேந்திர மோடியின் படத்துக்கு தேர்தல் அதிகாரி கறுப்பு வர்ணத்தை பூசியுள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அதிகாரியை 'சஸ்பெண்ட்' செய்தும், உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வாசகர் கருத்து (7)
இந்த நாட்டில் நேர்மையானவர்களுக்கு இடமில்லை.அவர்களை பல விதமாக நசுக்குகின்றன அதிகார வர்கம் ஆளும் அரசியல் வாதிகளுக்கு அனுசரணையாக இருக்க.
பாரதப் பிரதமர் என்பது ஒன்றும் நாட்டின் மஹா ராஜா பதவி அல்ல, அவர் ஒரு மக்கள் ஊழியர் என்ற புரிதல் வேண்டும்!
இவர்கள் சொல்வது சரிதான். அது எப்படி பிரதமரின் படத்தை ..... ஒரு நியாயம் இருக்கவேண்டும் அல்லவா...
பிரதமர் ஒரு கட்சி சார்புடையவராக செயல்படக்கூடாது
இவர் பாஜாக்கா பிரசாரத்துக்கு போகலாம் ஆனா அழிக்கக் கூடாது. தேர்தல் கமிசனா, பாஜாக்கா ஏஜண்ட்டா? இவுரு எல்லாருக்கும் பிரதமர்ன்னா தேர்தல் பிரசாத்துக்கு ஏன் போகணும்? மக்கள் வரிப்பணத்தில் பறந்து வந்து ஒரு கட்சிக்கு ஏன் ஓட்டு கேக்கணும்? இதுக்கெல்லாம் பதில் வராது
அந்தளவிற்கு பாகிஸ்தான் மீது அளவுக்கடந்த பாசம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அதெப்படி நம் நாட்டின் பிரதமர் படத்தை வைக்க எல்லாருக்கும் உரிமை உண்டு அடுத்த பிரதமராக இன்னொருவர் வரும் வரைக்கும்