பொன்னேரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
பொன்னேரி:பொன்னேரியில், நேற்று, 13வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சப் - கலெக்டர் ஐஸ்வர்யா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் கனகவள்ளி ஆகியோர் உடனிருந்தனர்.
பொன்னேரி சப்- - கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தாயுமான் செட்டித் தெரு வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே முடிந்தது. அங்கு, வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்' என உறுதி மொழி ஏற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களின் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக, பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!