சீட்டு நடத்தி மோசடி மூவருக்கு வலை
திருத்தணி:திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன், மூர்த்தி மற்றும் சாமிராஜ். இவர்கள் மூவரும், அமாவாசை சீட்டு நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருத்தணி, பெரியார் நகர், பி.எஸ்.எஸ்.,புரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர், மேற்கண்ட மூவரிடமும், அமாவாசை சீட்டு கட்டி வந்தார்.
சீட்டு முடிந்து பல மாதங்கள் ஆகியும், கோவிந்தராஜனுக்கு, இதுவரை, 1.70 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 2.50 லட்சம் ரூபாய் கொடுக்காமல், மூவரும் ஏமாற்றினர்.
இது குறித்து, கோவிந்தராஜன் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!