ADVERTISEMENT
தேர்தலில் போட்டி!
நான் ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். மக்களுடனான என்னுடைய தொடர்பை தொடர விரும்புகிறேன். ஒடிசாவில் அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் போட்டியிடும் என் விருப்பத்தை கட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.
தர்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
உலகின் மிகச் சிறந்த நாடு!
நீதித் துறை, மாநில அரசுகள், விவசாயிகள், வர்த்தகர்கள் என அனைவருடனும் மத்திய அரசு மோதல் போக்குடன் உள்ளது. இதை கைவிட்டு ஒன்றாக உழைத்தால், உலகின் மிகச் சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற முடியும்.
அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடில்லி முதல்வர், ஆம் ஆத்மி
உதவி செய்யவில்லை!
பீஹார் போன்ற ஏழை மாநிலங்களுக்கு போதிய நிதியுதவிகளை மத்திய அரசு செய்யவில்லை. வெளியில் இருந்து கடன் வாங்குவதிலும் குடைச்சல் கொடுக்கின்றனர்.
நிதிஷ் குமார்
பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!