Load Image
Advertisement

திருவெள்ளீஸ்வரர் கோவிலில் டிசம்பருக்குள் கும்பாபிஷேகம் அறநிலைய அமைச்சர் தகவல்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருவெள்ளவாயல் கிராமத்தில் உள்ள சாந்தநாயகி உடனுறை திருவெள்ளீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வின்போது தெரிவித்தார்.

ஆணையர் குமரகுருபரன், பொன்னேரி எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சித்ராதேவி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்விற்கு பின், அமைச்சர் தெரிவித்ததாவது:

திருவெள்ளவாயல் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்களால் கட்டப்பட்ட, திருவெள்ளீஸ்வரர் கோவிலுக்கு, திருப்பணிகள் நடத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன.

இக்கோவிலில், 57 லட்சம் ரூபாய் நிதியில், திருப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, துறை ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு மாதத்திற்கு உள்ளாக, கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டாலும், ஆணையர் பொது நிதியில் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின், 407 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதிக்குள், மேலும், 34 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

நுாறு மற்றும் 1,000 ஆண்டுகள் கடந்த கோவில்களை புனரமைக்க, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அந்த நிதியில், 104 கோவில்கள் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement