தேசிய வாக்காளர் தினம் மாணவியர் சைக்கிள் பேரணி
திருத்தணி:திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.
திருத்தணி தொகுதி தேர்தல் துணை அலுவலர் லோகநாதன் வரவேற்றார். இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹசரத்பேகம் பங்கேற்று மாணவியரின் சைக்கிள் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட மாணவியர் சைக்கிளில் திருத்தணி நகராட்சியில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் ஊர்வலமாக சென்று, அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும், ஓட்டளிப்பது நம் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
மேலும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் கேத்தரின் சரண்யா, திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, வருவாய் ஆய்வாளர்கள் கமல், முகமது யாசர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமரவேல், பொறுப்பு தலைமை ஆசிரியர் அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!