புதிய பாரத எழுத்தறிவு திட்ட கல்வி விழிப்புணர்வு பேரணி
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை வட்டார வள மையம் சார்பில், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நேற்று, பள்ளி சாரா மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள், மேற்பார்வையாளர்களுடன் இணைந்து இந்த பேரணியை நடத்தினர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர்.
பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, செல்லாத்துார் மற்றும் செல்லாத்துார் காலனி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!