Load Image
Advertisement

சாலையோர வியாபாரிகள் திருத்தணியில் கணக்கெடுப்பு

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 100க்கும் மேற்பட்டோர் சாலையோரம் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி நிர்வாகம் சார்பில், அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு வியாபாரத்திற்கு கடனுதவி, தள்ளுவண்டிகள், வியாபாரம் செய்வதற்கு இடவசதி மற்றும் போலீசார் தொந்தரவு இல்லாமல் வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டை உதவுகிறது.

இந்நிலையில், திருத்தணி நகராட்சியில் நடப்பாண்டிற்கான சாலையோர வியாபாரிகள் குறித்து புதிய கணக்கெடுப்பு பணிகள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், தகுதி வாய்ந்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இதற்கான நகராட்சி நிர்வாகம் வாகனங்கள் வாயிலாக, 21 வார்டுகளில் அறிவித்து, உடனே தகுதி வாய்ந்த சாலையோர வியாபாரிகள் விண்ணப்பித்து அடையாள அட்டை பெற வேண்டும் என, அறிவித்து வருகின்றனர்.

திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம் கூறியதாவது:

நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறோம்.

சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை பெறுவதற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிகள் ஆக இருந்தால் அதற்கான அடையாள அட்டை நகல், ஏற்கனவே அடையாள அட்டை பெறப்பட்டிருப்பின் அதற்கான நகல் ஆகியவை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

கள ஆய்வுக்கு வரும் நபர்களிடம் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement