ADVERTISEMENT
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு, பத்மாவதி நகரில், ஒன்றரை ஏக்கர் பரப்பில், பூங்கா இடம் உள்ளது.
இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம், சேவை அமைப்பான வாகை குழுவினர் வாயிலாக, மேம்படுத்தி வருகிறது.
அக்குழுவினர், மூன்று மாதங்களாக, பூங்காவில் வளர்ந்த செடி, கொடிகளை அகற்றி, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைத்து, சீரமைத்து வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அக்குழுவினர், சிறுவர், பெரியோர் என, சமூக ஆர்வலர்களை இணைத்து, மரக்கன்று நட்டு, பூங்காவை மேம்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல், பூங்கா மேம்பாட்டு பணிக்கு வந்த வாகை தன்னார்வலர் குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
'குடி'மகன்கள் இரவு நேரத்தில், பூங்காவில் நுழைந்து, மது அருந்தி விட்டு, காலி பாட்டில் மற்றும் டம்ளர்களை பூங்காவில் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, 'குடி'மகன்கள் வீசிச் சென்ற, மதுபாட்டில், டம்ளர்களை பொறுக்கி எடுக்கவே வெகு நேரம் பிடித்தது.
பூங்காவை சீரமைத்து, மரம் வளர்க்க வேண்டும் என்ற தன்னார்வலர்களின் ஆர்வமும், நல்லெண்ணமும் இதுபோன்ற 'குடி'மகன்களின் செயலால் தடைபடுகிறது.
எனவே, 'குடி'மகன்கள் இதை உணர்ந்து, நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இதுபோல் பொது இடத்தை நாசப்படுத்த வேண்டாம்.
இதற்கு, காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், என தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!