அண்ணாமலைச்சேரியில் 200 நெல் மூட்டைகள் திருட்டு
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, அண்ணாமலைச்சேரி கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் வெங்கடேசன், 40. இவர் தன் நிலங்களில் நெல் பயிரிட்டு, கடந்த, 20ம் தேதி அவற்றை அறுவடை செய்தார்.
அறுவடை செய்த நெல் மணிகளை வெப்பத்துார் -- அண்ணாமலைச்சேரி சாலை அருகே உலர வைத்திருந்தார்.
இரு தினங்கள் அங்கு உலர வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த, 21ம் தேதி அதை மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு அனுப்புவதற்காக அதே இடத்தில் வைத்திருந்தார்.
பின்பு, வெங்கடேசன் வீட்டிற்கு சென்றுவிட்டு, மறுநாள் அதிகாலை அங்கு சென்று பார்த்தபோது, நெற்களத்தில் இருந்த, 200 மூட்டை நெல்மணிகள் திருடு போயிருப்பதை கண்டார்.
இது தொடர்பாக திருப்பாலைவனம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!