24 சவரன் நகை ரூ.9 லட்சம் கொள்ளை
மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் குமார், 39. இவருக்கு வாணி, 32, என்ற மனைவியும், யோகேஷ், 15, மனோஜ், 14 என, இரு மகன்களும் உள்ளனர்.
பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் இரு மகன்களும் படித்து வருவதால் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பால் காய்ச்சுவதற்காக, கடந்த 23ம் தேதி குடும்பத்துடன் குமார் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, இவரது சகோதரர் முரளி என்பவர் அப்பகுதிக்கு வந்தபோது வீட்டின் கேட் திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். சகோதரர் குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து குமார் வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 24 சவரன் நகை மற்றும் 8.81 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து குமார் அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 25 - 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகமூடி அணிந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது என தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!