துணை ஆணையரை கண்டித்து கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன், 29 உபகோவில்களில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஊழியர்களுக்கு, 2016ம் ஆண்டு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க அரசு தீர்மானித்து அதற்கான உத்தரவை பிறப்பித்தது.
அதை தொடர்ந்து, திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் தவிர மீதமுள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் ஊழியர்களுக்கும் 7வது ஊதியக் குழுவின் படி சம்பளம் வழங்கப்படுகிறது.
திருத்தணி கோவில் ஊழியர்களுக்கும், கடந்த ஆண்டே ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, ஹிந்து அறநிலை துறை அமைச்சர், ஆணையர் பலமுறை திருத்தணி கோவில் பெண் துணை ஆணையருக்கு அறிவுறுத்தியும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த,75க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் நேற்று மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் துணை ஆணையரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக கோவில் தலைமை அலுவலகத்திற்கு வந்து துணை ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கி, விரைந்து, ஏழாவது ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
ஹிந்து சமய அறநிலைய துறை ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் துணை ஆணையர் விஜயா தெரிவித்தார். பின் ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!