கவாத்துக்கு பின் பூ க்க தயாராகும் மல்லி செடிகள்
சோழவரம்:சோழவரம் அடுத்த, கங்கையாடிகுப்பம், குதிரைப்பள்ளம், அகரம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லி தோட்டங்கள் உள்ளன. இங்கு குண்டு மல்லி, முல்லை ஆகியவை வளர்க்கப்படுகிறது.
மல்லி செடி வளர்ப்பில் ஈடுபடுபவர்கள், தினமும், அதிகாலையில் பூக்களை பறித்து சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வர்.
செடி பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ஒரு முறை செடிகளின் கிளைகளை முழுமையாக வெட்டி எடுக்கின்றனர். பின்பு, செடிகளுக்கு இடையே உள்ள புல், களை செடிகளை அகற்றி, தேவையான மருந்துகளை தெளிக்கின்றனர். இதற்கு 'கவாத்து' எனப்பெயர்.
கவாத்து என்பது, தரையிலிருந்து, 50 செ.மீ., உயரத்தில் உள்ள கிளைகளை வெட்டி விடும் முறையாகும்.
காய்ந்த கிளைகளை, நீக்கிவிட்டு, பூச்சி தாக்குதலை தவிர்க்க, தாவர பூச்சிக் கொல்லியும் அதன் பின், வளர்ச்சிக்கான மருந்துகளும் தெளிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்வதால், புதிதாக துளிர்விட்டு, செடிகள் செழிப்பாக வளரும், அதன் வாயிலாக அதிக மல்லிப் பூக்களை பெற முடிகிறது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மேற்கண்ட கிராமங்களில் அடிகவாத்து செய்வது, களை எடுப்பது, மருந்து தெளிப்பது என, மல்லி வளர்ப்பவர்கள தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மாதமாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மல்லி வரத்து குறைந்து, அதன் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
கவாத்து செய்யப்பட்ட மல்லி தோட்டங்களில், செடிகளில் புதிதாக துளிர்விட்டு வருவதால், பிப்ரவரி மாத இறுதியில் மல்லி பூக்கள் பூக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!