செயல் அலுவலருக்காக காத்திருக்கும் சவால்கள்
இங்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழக - -ஆந்திர எல்லையில் உள்ளதால் சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசியத் தேவைக்கு இங்கு வருகின்றனர்.
சென்னை- - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் இவ்வூர் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.
இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
பேரூராட்சியில் நடைபெறும் முக்கிய பணிகளான குடிநீர் வரி, தொழில் வரி, புதிய கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
இங்கு, சேகரமாகும் குப்பையை அள்ள தனியார் நிறுவனம் வாயிலாக, 30 துாய்மை பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
இந்த குப்பை, சிட்ரபாக்கத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் வாயிலாக உரமாக மாற்றும் பணி நடக்கிறது.
புது செயலாளர் நியமனம்
இங்கு செயல் அலுவலராக பணியாற்றி வந்த மாலா, நான்கு மாதத்திற்கு முன் திருமழிசை பேரூராட்சிக்கு பணி இடமாற்றத்தில் சென்றதால், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், தற்போது பொறுப்பு செயல் அலுவலராக உள்ளார்.
முழு நேர செயல் அலுவலர் இல்லாததால் வரி வசூல் கடைகளுக்கான வாடகை அதிகளவில் நிலுவையில் உள்ளது. குளங்கள் சீரமைத்தல் பணி கிடப்பில் உள்ளது. வரிவசூல் நிலுவையில் உள்ளதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது.
சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது, பேனர் கலாசாரத்தை தடுக்க முடியாதது, பைக் ஸ்டாண்டு அமைப்பது உள்ளிட்டவை செயல்படுத்த முடியாமல் உள்ளது.
பேரூராட்சி முழுதும், 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலைகள் தற்போது சேதம் அடைந்து உள்ளது.
இதுகுறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிதாக செயல் அலுவலர் நியமனம் போடப்பட்டு உள்ளது' என்றார்.
புதிதாக பொறுப்பு ஏற்க வரும் செயல் அலுவலருக்கு மேற்கண்ட பணிகள் பெரும் சவாலாக இருக்கும்.
''ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு முழு நேர செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு விட்டார். விரைவில் அவர் பணியில் சேர்ந்து, வரி வசூல் நிலுவை, கிடப்பில் உள்ள திட்டங்கள், பேனர் கலாசாரம், சாலையில் திரியும் மாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இனி முழு வீச்சில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாகின் அபுபக்கர்ல
பேரூராட்சி இணை இயக்குனர், திருவள்ளூர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!