கொத்தனாரை தாக்கி நகை, பணம் திருட்டு
சோழவரம்:சோழவரம் அடுத்த, நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன், 70; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, இவரும், இவரது மனைவி மகேஸ்வரியும், துாங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு, வீட்டுக் கதவின் தாழ்பாளை உடைத்துக் கொண்டு, மர்ம நபர்கள் விஜயன் வீட்டினுள் புகுந்தனர். சத்தம் கேட்டு எழுந்து வந்த விஜயனை, கட்டையால் தலையில் தாக்கினர்.
பின், மகேஸ்வரியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, பீரோவை திறந்து, அதிலிருந்த, 6 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!