புகார் பெட்டி: மின் கம்பத்தை சூழ்ந்த கொடிகள்
மின் கம்பத்தை சூழ்ந்த கொடிகள்
திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் ஊராட்சியில், அரக்கோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மின் கம்பத்தில் கொடி படர்ந்துள்ளது.
கொடிகள் மின் கம்பத்தில் படர்ந்து தற்போது கம்பிகளை சூழ்ந்துள்ள தால் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதை அகற்றி சீரமைக்க மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகலிலும் எரியும் தெரு விளக்குகள்
திருமழிசை பேரூராட்சிக்குட்ட 15 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தெருவிளக்குகள் உள்ளன. திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையோரம் உள்ள மின் கம்பங்களின் விளக்குகள் இரவு, பகல் என தொடர்ந்து எரிந்து வருகின்றன.
இதனால், மின்சாரம் வீணாவதோடு மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. பகலில் எரியும் தெருவிளக்குகளை கட்டுப்படுத்த மின் வாரியம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் என, யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் பகலில் எரியும் மின் விளக்குகளைக் கட்டுப்படுத்த, மின்சாரம் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- டி.பால்ராஜ், திருமழிசை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!