பேருந்து நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்., வசதி அவசியம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு, சுற்றுப்பகுதி கிராம மக்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினசரி ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.
இங்கு, ஏ.டி.எம்., மைய வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர். அதிகாலை 4:00 மணியில் இருந்து, இரவு 12:00 மணி வரை, பேருந்து நிலையத்தில், பயணியர் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், ஏ.டி.எம்., வசதி இல்லை. பயணியர் பணம் எடுக்க வேண்டுமானால், சற்று துாரத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியின் வெளியில் உள்ள ஏ.டி.எம்., செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேருந்து நிலையம் உள்ளேயும் வெளியிலும், ஏ.டி.எம்., வசதி இல்லை.
இது குறித்து, பயணியர் தரப்பில் கூறியதாவது:
பிற நகரங்களில், மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில், வங்கி ஏ.டி.எம்., வசதிகள் உள்ளன.
முக்கிய சாலைகள், வணிக நிறுவனங்கள் அருகில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., வசதி இருந்தால், பயணியருக்கு வசதியாக இருக்கும்.
அதற்கான ஏற்பாட்டை, பொதுத் துறை வங்கியோ அல்லது தனியார் வங்கியோ செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!