தேசிய யோகா போட்டி காஞ்சி மாணவர் சாம்பியன்
காஞ்சிபுரம்:பாலக்காடு சத்குரு யோகாஸ்ரமம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் கோவை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில், 15-வது, தேசிய அளவிலான யோகாசன போட்டி சமீபத்தில் கோவையில் நடந்தது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து, 750 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யோகா மையத்தைச் சேர்ந்த மாணவர் ராஜகுமாரன், 15; நான்காம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில் உள்ள அனைத்து வயது பிரிவிற்கும் உள்ளடக்கிய யோகாசனப் போட்டியில் 'சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்' பட்டம் வென்றார்.
மாணவர் திலக் ஒன்பது மற்றும் பிளஸ் 2 வகுப்பு வரையில் நடைப்பெற்ற யோகாசன போட்டியில் சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கிடையே நடைப்பெற்ற யோகாசன போட்டியில் மாணவர் மோனேஷ் சாம்பியனாக தேர்ந்தெடுக்கபட்டார்.
பதக்கம் வென்ற மாணவர்களை யோகா ஆசிரியர் சத்யநாராயணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!