Load Image
Advertisement

படை வீரர்களுக்கு மாணவர்கள் கடிதம்

காஞ்சிபுரம்:எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்கள் குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லுாரி மாணவ- - மாணவியருக்கு எல்லை பாதுகாப்பு படை வீரரும், 'தியாகம் போற்றுவோம்' அமைப்பின் நிறுவனருமான கிள்ளிவளவன் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

அதன்படி, காஞ்சிபுரம் அடுத்த, கரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பாதுகாப்பு படை வீரர்கள் செய்துள்ள உயிர் தியாகங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.

இப்பள்ளி மாணவர்கள் நாட்டின் எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக வாழ்த்து கடிதங்கள் அனுப்பினர்.

நடப்பு ஆண்டு நான்காவது ஆண்டாக குடியரசு தின வாழ்த்துகளை கடிதம் வாயிலாக அனுப்ப உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஆர்வத்தோடு கலந்துரையாடிய மாணவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர் கிள்ளிவளவன், புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement