ADVERTISEMENT
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருக்காலிமேட்டில் இயங்கி வரும், மாநகராட்சி துவக்கப் பள்ளியில், 292 மாணவ- - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக மோகன்குமார் பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியில் பயிலும் மாணவ- - மாணவியர் ஒரு நாள் கூட 'லீவு' எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவ- - மாணவியரை ஊக்கப்படுத்தும் விதமாக மாதந்தோறும், தலைமை ஆசிரியர், தன் சொந்த செலவில், பேனா, பென்சில் நோட்டுப்புத்தகம் என, பரிசாக வழங்கி மாணவ - -மாணவியரை பாராட்டி உற்சாகப்படுத்தி வருகிறார்.
அதன்படி, கடந்த டிச., மாதம், ஒரு நாள் கூட லீவு எடுக்காத, 75 மாணவ- - மாணவியருக்கு பரிசு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.
சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கோமதி மாணவ- - மாணவியருக்கு பரிசு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பொன்வேல், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்குமார் கூறியதாவது:
'லீவு' எடுக்காத மாணவ- - மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையில், மாதந்தோறும் பரிசு வழங்குவதன் வாயிலாக, பள்ளிக்கு முறையாக வர வேண்டும் என, மாணவ- - மாணவியருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!